ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தொடரான கனா காணும் காலங்கள் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீ பாலாஜி. அதன்பின் சினிமா திரையில் சக்திவேலின் வழக்கு எண் 18/9 என்ற படத்தில் புது முகமாக நடித்தார அறிமுகமானார். அந்தப் படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது.

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்தின் மூலம் ஸ்ரீ பிரபலமானார். இதனைத் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன்பப்படி, வில் அம்பு, இறுகப்பற்று போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார். இவ்வாறு  வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriram Natarajan (@shri_blueticked)

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவரது சமூக ஊடகப் பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இவர் பதிவிடும் பதிவுகளில் வைக்கப்படும் கருத்துக்கள் அல்லது ஹேஷ்டேக்குகள் தவறாக இருப்பதாக பல இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது தோற்றமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறுகப்பற்று திரைப்படத்திற்கு பின் இவருக்கு சம்பளப் பிரச்சனை மற்றும் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை விட்டு விலகி தனிமையில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இறுகப்பற்று படம்  தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.ஆர். பிரபு, நடிகர் ஸ்ரீயின் நிலையை பார்த்து வருந்துவதாகவும், அவருக்கு உதவ விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், இறுகப்பற்று திரைப்பட சம்பளம் வழங்காததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தவறானவை என்றும், தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், நடிகர் ஸ்ரீயின் இந்த நிலையை பார்த்து சினிமா துறையில்  உள்ளவர்கள் சிலர் மற்றும் ரசிகர்கள்  தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.