சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்று காலையில் கனிமொழி அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு நான் பதிலளித்து இருந்தேன். அவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். கல்விக்கு பணம் தர மறுக்கிறார்கள் என்பது தவறான சொல்லாகும். மத்திய அரசு ஆரம்ப கல்வி, உயர்கல்விக்கு பணம் கொடுக்கின்றனர்.

இவ்வளவு பேசுகிற கனிமொழி அவர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு பிஎம் ஸ்ரீ பள்ளிக்கூடத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறோம் என்று ஏன் கூறினார்கள். அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. எங்கேயும் கல்விக்கு பணம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இதை திரித்து மாற்றி பேசி, மத்திய அரசு கல்விக்கு பணம் கொடுக்கவில்லை என்று தொடர்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.