
நன்றியுள்ள விலங்கு நாய் என கூறுவர். மனிதன் பழங்காலம் முதலே நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கத் தொடங்கியுள்ளனர். பலரும் நாயை தன் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வருகின்றனர். நாயும் அதன் நன்றி உணர்வை பல விதங்களில் தனது முதலாளிகளுக்கு காட்டி வரும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுபோன்று சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஒரு வீட்டில் உரிமையாளர் ஒருவரின் நாய் அந்த உரிமையாளர் கருவுற்றிருக்கும் முதல் அந்த குழந்தை பிறந்து இரண்டு வயது வரை அந்த குழந்தையிடம் ஒரு மூத்த சகோதரனைப் போல பழகும் வீடியோ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வரும் இந்த வீடியோவுக்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். நாயின் பாசத்தை அளவிட முடியாது, நன்றியுள்ள ஒரு விலங்கு நாயாகும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
— Buitengebieden (@buitengebieden) November 20, 2024