AI துறையில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் ஒரு தகவல், தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ChatGPT பயன்படுத்தும் போது “Please”, “Thank you” போன்ற மரியாதையான வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவது OpenAI நிறுவனத்திற்கு “tens of millions of dollars”, அதாவது 100 கோடிக்கணக்கான செலவுகளை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் X  பக்கத்தில் ஒருவர் எழுதிய கேள்விக்கு பதிலளிக்கும் போது வெளிவந்தது. பயனர்கள் மரியாதையாக பேசும் ஒவ்வொரு பதிலுக்கும் ChatGPT பெரிய அளவில் கணிப்பொறி சக்தியை பயன்படுத்துகிறது. இது data centres-ல் அதிக மின்சார செலவுகளை ஏற்படுத்துகிறது. இதில் தகவலை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இயந்திரங்கள் வெப்பமடையாமல் இருக்கக் குளிரூட்டும் அமைப்புகளும் செயல்படவேண்டும்.

இதற்காக மெகா அளவில் மின்சாரம் தேவையாகிறது. அதனால்தான் OpenAIயின் ஒவ்வொரு “தயவு செய்”க்கும் “நன்றி”க்கும் ஒரு environmental cost ஏற்படுகிறது. ஆனாலும், “இது ஒரு நல்ல செலவாகவே இருக்கிறது” என்று சாம் ஆல்ட்மேன் நேரடியாகக் கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள் சாட்போட்டின் பதில்களை இன்னும் நாகரிகமாகவும், மென்மையாகவும் உருவாக்க உதவுகின்றன. Microsoft-இன் UX வடிவமைப்பாளர் கர்டிஸ் பீவர்ஸ் கூறுவதாவது, மரியாதையான வார்த்தைகள் பயன்படுத்தினால் AI மாடல்கள் கூட மரியாதையான பதில்களை உருவாக்க அதிக சாத்தியங்கள் உள்ளன.

இது conversation-இன் தரத்தையும், துல்லியத்தையும் மேம்படுத்தும். Microsoft Work Lab வெளியிட்ட அறிக்கையிலும், “AI உங்கள் எளிமையான மரியாதையான வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப மரியாதை காட்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், “Please”, “Thank you” என்றால் ChatGPTயில் polite filter மட்டும் அல்ல, மின்சார பில் கூட வருகிறது என்பது தான் சாம் ஆல்ட்மேனின் உண்மையான ரிவீல்!