முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இதில் கவுரவம் பார்க்காதீர்கள். இவர் என்ன அழைப்பது நாம் என்ன போவது என்று நினைக்க வேண்டாம். இது தமிழ்நாட்டு பிரச்சனை அதை சிந்தித்துப் பார்த்து நீங்கள் வரவேண்டும். தொகுதியில் மறு சீரமைப்பு எப்படியாவது கொண்டு வந்து தமிழ்நாட்டின் அந்த உரிமையை, அந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி உள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

அதனால் வருகிற 5ம் தேதி நாம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 40 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் வருகை தருவதாக கூறியுள்ளனர். ஆனால் அதில் சிலர் நாங்கள் வர வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர். எனவே வர முடியாது, வர இயலாது என்று கூறுபவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். இது தனிப்பட்ட கட்சியின் பிரச்சினை கிடையாது இது நம்முடைய உரிமை. அதனால் அனைவரும் தயவு கூர்ந்து வரவேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.