சர்வதேச உழைப்பாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் வாங்கும் சராசரி சம்பளம் குறித்த தகவலை world of statistics என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் தொழிலாளர்கள் வாங்கும் சராசரி சம்பளம் 46,000 ரூபாயாக இருக்கிறது. இந்தியாவை விட பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா, வெனிசுலா, வங்கதேசம், இந்தோனேசியா, அர்ஜென்டினா, துருக்கி மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் குறைவான சராசரி சம்பளம் வழங்கப்படுகிறது.

உலக அளவில் 23 நாடுகளில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது. அதன்படி சர்வதேச அளவில் அதிக சம்பளம் வழங்கும் நாடுகளில் ஆஸ்திரேலியா நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், டென்மார்க், கத்தார், ஐஸ்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடத்தில் இருக்கிறது. மேலும் உலக அளவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சராசரி சம்பளத்தின் அடிப்படையில் இந்தியா 65-வது இடத்தில் இருக்கிறது.