ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் “வேட்டையன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து “மனசிலாயோ” பாடலுக்கு நடனம் ஆடியது வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான “பாட்ஷா” படத்திற்காக பாடல் எழுதிய காலத்தை நினைவுகூர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். பாட்ஷா படத்துக்காக பாடல் எழுதும்போது அவருக்குக் கிடைத்த சம்பள அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அவரின் அனுபவம், தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பனுடன் சம்பள விவாதம் ஏற்பட்டது. முதலில் கவிஞர் அனைத்து பாடலுக்கும் ரூ.50000 சம்பளம் வேண்டும் என்று கூற, தயாரிப்பாளர் ஒரு பாடலுக்கு ரூ.1000 தான் என்று கூறியுள்ளார். கடைசியில் 45 ஆயிரம் ரூபாய் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.