இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் சில வீடியோக்கள் வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் காவல்துறையினரை கேலி செய்த பைக் ரைடர்க்கு உடனடி தண்டனை வழங்கிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. அதாவது அந்த வீடியோவில் சில பைக் ரைடர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆபத்தான முறையில் சாகசங்களை செய்து கொண்டு சென்றனர். அப்போது அவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் துரத்தி சென்ற நிலையில், பைக் ரைடர்கள் அனைவரும் தப்பித்து சென்றனர். ஆனால் ஒருவர்  மட்டும் மிகுந்த நம்பிக்கையுடன் காவல்துறையினர் பின்னால் வருவது தெரிந்தும், அவர்கள் வாகனத்தின் முன் பைக்கின் மேல் ஏறி கைப்பிடியை முறுக்க தொடங்கினார்.

இதனை அதிகாரிகள் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சில வினாடிகளில் அந்த பைக் ரைடர்  கைது செய்யப்பட்டு காவல்துறையின் வாகனத்தில் ஏற்றப்பட்டார். அப்போது காவல்துறை வாகனத்தின் முன் சென்று கெத்து காட்டிய அந்த ரைடர் தற்போது பதற்றத்துடன் காவல் நிலையத்தில் அழுது கொண்டே அமர்ந்திருக்கிறார். அதோடு அவர் தனது பெற்றோருக்கு போன் செய்து கண்ணீருடன் உதவி கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோவை பதிவு செய்து காவல்துறையினர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாலை விதிமுறைகளை கேலி செய்வதன் முடிவுகளை அனைவருக்கும் வழிகாட்டும் விதமாக உள்ளது.