மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் உஜ்ஜைனில் நடைபெற்ற கொடூர சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான சாலையில், பட்டப் பகலில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. இது நடைபெற்றபோது, சுற்றியிருந்தவர்கள் உதவ முன்வராதது மட்டுமின்றி, அதனை வேடிக்கை பார்த்தது இதைக் கேட்பவர்களின் மனதை கொதிப்படையச் செய்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானதுடன், பலரின் கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது. பொதுவெளியில் நடக்கும் இத்தகைய அநீதியை தடுக்க யாரும் முன்வராததின் உள்நோக்கம் சமூகத்தின் நேர்முகத்தை கேள்விக்குள்ளாக்குவதாகவும் . அடுத்தவர் கஷ்டத்தில் தலையிடாமல் அதை வேடிக்கை பார்ப்பது மனிதநேயத்தின் அடிப்படைகளை குழப்பதாகவும் நெட்டிசன்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.