தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்த தி கோட் என்ற திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கிய நிலையில், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று வெளியான நிலையில், தனது குடும்பத்துடனும், படக்குழுவினர் உடனும் நேற்றிரவு விஜய் கோட் திரைப்படத்தை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

இதில் அவரது தாய், தந்தை, மனைவி, குழந்தைகளும், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள NFDC-யில் படம் பார்த்துள்ளனர். இன்று ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், முன்னதாகவே அவர் படம் பார்த்ததாக தெரிகிறது.