
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அனைத்தும் சரியாக நடந்தது. ஆட்சி யார் கையில் இருக்கு ? உங்ககிட்ட தான இருக்கு… 2 1/2 வருஷம் நீங்க தானே ஆட்சி செய்கிறீர்கள்…. எங்களை விட்டுட்டீங்க…. லஞ்ச ஒழிப்புத்துறை வச்சு விசாரணை பண்ணீங்க… உங்களை யாரு பண்ண வேண்டாம்ன்னு சொன்னது….
மணல் குவாரி விஷயத்தில் முழுமையாக அமலாக்கத்துறையின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் எந்த காலத்தில் இருந்து… எந்த காலத்திற்கு எடுத்திருக்கிறார் என்று நமக்கு தெரியாது… விசாரனை முழுமையாக முடிந்து, அறிக்கை சமர்பித்த பிறகு… விசாரணையில் அமலாக்கத்துறை யார் யாரையெல்லாம் அழைக்கிறார்களோ…. அவர்களெல்லாம் போகத்தான் வேண்டும்…
எங்களை கூப்பிட்டாலும் போகத்தான் போறோம். இவங்களை மாதிரி பயந்து, ஒடுங்கி, நாங்க இருக்க மாட்டோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதிலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மாற்று கருத்து இல்லை. கொள்ளையடித்தால் தண்டனை அனுபவித்து தான் ஆகணும் என தெரிவித்தார்.