ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் தன்னை தண்டிக்கக்கூடிய முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படாததற்கு காரணம் ஆசிரியர்களா? அல்லது மாணவர்களா? என்று தலைமை ஆசிரியர் கேள்வி எழுப்பினார்.

அப்போது ஆசிரியர்கள் பக்கம் தவறு இருந்தால் முழுமையாக தரையில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் என்றும், காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவேன் என்றும் கூறினார். அவர் சொன்னபடி தரையில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் தோப்புக்கரணம் போட்டார். கிட்டத்தட்ட 50 முறைகள் தோப்புக்கரணம் செய்தார். இதனை கண்ட மாணவர்கள் “சார் தயவு செய்து அப்படி செய்யாதீர்கள்” என்று கூறிக்கொண்டே இருந்தனர். ஆனாலும் தலைமை ஆசிரியர் சிந்தா ரமணா தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். இந்த நிகழ்வு 2.3 நிமிட வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு அரசு மற்றும் கல்வி வட்டாரங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளது. அமைச்சர் நாரா லோகேஷ் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது தன்னை பழித்துக் கொள்வதற்காகவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினார். மேலும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அரசு மற்றும் சமூக ஒத்துழைப்பின் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறும் என்று தலைமை ஆசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.