
தமிழ்நாட்டின் சட்டசபை 2025 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியது. இந்த சட்டசபை கூட்டத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், அனைத்து தரப்பு கட்சியினரும் கலந்து கொண்டனர். அப்போது சட்டமன்றத்திற்குள் ஆளுநர் ஆ. என். ரவி நுழைந்தபோது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுக கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இந்த சம்பவம் தொடர்பாக கோஷமிட்டனர். இதனை அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போதும் அந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதனை அடுத்து தேசிய கீதத்தை இழிவு படுத்தியதாக ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
தேசிய கீதத்தை அவமதித்ததும், ஆளுநரை உரையாற்ற அனுமதிக்காமல் கோஷமிட்ட அதிமுகவினரை சபாநாயகர் சட்டசபையில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். இதனை அடுத்து அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேறினர். இந்த காட்சிகள் அனைத்தும் வெளியிடுவதற்கு ஊடகங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டதாவது,”சட்டசபை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களுக்கு ஒளிபரப்பாமல் தடுத்து நிறுத்தியது ஏன்? சட்டப்பேரவை நிகழ்வுகளை மொத்தமாக துண்டித்தது ஸ்டாலினின் மாடல் அரசு என விமர்சித்தனர். மேலும்”யார் அந்த SIR என்ற கேள்வி எதிர்கொள்ள அவ்வளவு பயமா முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாட்டில் அவசரநிலை ஆட்சி நடைபெறுகிறது என்று தோழர் கூறியது உண்மைதான்” என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.