
சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் யோகேஸ்வரன், சபரீனா இருவரும் பட்டப்படிப்பு கடைசி ஆண்டில் படித்து வருகின்றனர். யோகேஸ்வரன் மற்றும் சபரீனா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள் கல்லூரியின் விடுமுறை நாட்களில் பைக்கில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்க்க செல்வது வழக்கம் . வழக்கம்போல் இருவரும் பைக்கில் மாமல்லபுரம் நோக்கி சென்றுள்ளனர். பைக்கில் இருவரும் சென்று கொண்டிருக்கும்போது தனியார் பேருந்தை முந்திக்கொண்டு வேகமாக யோகேஸ்வரன் சென்றுள்ளார்.
அப்போது பேருந்து எதிர்பாராத விதமாக பைக்கின் மீது மோதியுள்ளது. இதனால் இருசக்கர வாகனம் கட்டுப்பாடு இன்றி சாலையில் தூக்கி எறியப்பட்டது. இந்த விபத்தில் பின்னால் இருந்த சபரீனா சாலையில் தூக்கி எரியப்பட்டார். உடனே படுகாயம் அடைந்த சபரீனாவை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சபரீனா இறந்ததை அடுத்து யோகேஸ்வரன் செய்வதறியாது கதறி அழுதுள்ளார்.
தனது காதலி இறந்ததால் தானும் உயிரோடு இருக்கக் கூடாது என சாலையின் எதிரே ஓடி உள்ளார். அப்போது அங்கு புதுச்சேரி நோக்கி வந்த பேருந்தின் உள்ளே பாய்ந்தார் இதனால் பேருந்தின் டயர்களில் சிக்கி பரிதாபமாக உடல் சிதறிய நிலையில் கொடூரமாக உயிரிழந்தார் . இதுகுறித்து பொதுமக்கள் மாமல்லபுரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் யோகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி இறந்த துயரம் தாங்காமல் காதலன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.