
மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவி தன்னை சித்திரவதை செய்வதாக வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் அரவிந்த்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நந்தினிக்கு வேறொருவருடன் தொடர்பு உள்ளது அரவிந்துக்கு தெரிய வந்தது. அதனால் அவர் நந்தினியை எச்சரித்தபோது கோபமடைந்த நந்தினி தனது நண்பர்களுடன் அரவிந்தை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தினார்.
அப்போது அரவிந்தை தனது மலத்தை சாப்பிட கட்டாயப்படுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்தார். பின்னர் இது குறித்து வெளியில் பேசினால் வீடியோவை இணையத்தில் வைரலாக்கி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் கடந்த நவம்பர் 2024 இல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அரவிந்த் எனக்கு நடந்த கொடுமைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் தன் மனைவியால் சமூகத்தில் கீழ்படுத்தப்பட்டதாகவும், அந்த வீடியோவை ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நந்தினி மற்றும் அவரது நண்பர்கள், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் ஆகியோர்தான் தனது மன அழுத்தத்திற்கு காரணம் என்றும், என்னை தற்கொலைக்கு தள்ளப்படும் நிலைக்கு கொண்டு சென்றது அவர்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் என்னால் வாழ முடியாது. எனவே தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.