
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தேவ்ரியா பகுதியில் உள்ள பட்டோலி கிராமத்தை சேர்ந்தவர் நௌஷாத் (30). இவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தவர். கடந்த ஒரு வாரம் முன்பு சொந்த நாடு திரும்பி உள்ளார். இந்நிலையில் நௌஷாத்தின் மனைவி அவரது உறவுக்காரரான ஒரு இளைஞருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளது, நௌஷாத்திற்கு தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து நௌஷாத்தின் மனைவி அவரது காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் நௌஷாத்தை, காதலனுடன் சேர்ந்து கத்தியால் வெட்டி கொலை செய்து உள்ளார்.
उत्तर प्रदेश : जिला देवरिया ने पत्नी ने बॉयफ्रेंड भांजे संग मिलकर पति नौशाद की हत्या कर दी और लाश सूटकेस में पैक करके 50 KM दूर फेंक दी।
नौशाद सऊदी अरब में रहकर कमाता था। इधर, पत्नी के भांजे से संबंध हो गए। एक हफ्ते पहले ही वो सऊदी से लौटा तो मर्डर कर डाला।
खबर सौजन्य… pic.twitter.com/YWYaGfyfIl
— Anurag Verma ( PATEL ) (@AnuragVerma_SP) April 21, 2025
“>
அதன் பின் இருவரும் சேர்ந்து நௌஷாத்தின் உடலை ஒரு பெரிய சூட் கேஸில் அடைத்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வயலில் கொண்டு சென்று வீசி உள்ளனர். இதனை தொடர்ந்து பக்கடி சாப்பர் பகுதியில் உள்ள வயலில் ஒரு சூட்கேஸில் 30 வயதுடைய ஒருவரது சடலம் கிடைப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி விரைந்து வந்து காவல்துறையினர் சூட்கேஸை திறந்த பொழுது அந்த உடலின் தலையின் அருகே பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை காவல்துறையினர் கண்டனர். அதன்பின் நடத்திய விசாரணையில் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நௌஷாத்தின் மனைவியை கைது செய்துள்ளனர். மேலும் அவரது காதலர் தலைமறைவாகியுள்ளதால் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.