
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னாண்டி பழைய பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் தாய் இவருக்கு இசக்கியம்மாள் என்ற மகள் உள்ளார். இசக்கியம்மாளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணம் முடிந்துள்ளது. இசக்கியம்மாளின் கணவர் சின்னதுரை. இசக்கியம்மாள் மற்றும் சின்னதுரை தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சின்ன துறை மது குடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்துள்ளார். இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று இசக்கி அம்மாளை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து இசக்கியம்மாள் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சின்னத்துரை இசக்கியமாளை அழைத்து வர அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் இசக்கியம்மாள் வர மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே தகராறு நடந்து கொண்டிருக்கும்போது இசக்கியம்மாளின் தாய் பெருமாள் தாய் இடையில் சென்று சின்னதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சின்னதுரை பெருமாள் தாயை சுவரில் பிடித்து தள்ளி உள்ளார்.
சுவற்றில் மண்டை இடித்து ரத்தம் கொட்டி அந்த இடத்திலேயே பெருமாள் தாய் மயங்கி உள்ளார். சின்னதுரை உடனே அங்கு இருந்து தப்பித்து ஓடி விட்டார். இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பெருமாள் தாயை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த திருப்பூர் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி சின்னத்துறையை கைது செய்துள்ளனர். மருமகன் மாமியாரை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.