
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெள்ளியங்காடு, முள்ளி வழியாக நீலகிரிக்கு 3-வது மாற்று பாதை செல்கிறது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சென்று வருகின்றனர். அத்திக்கடவு பாலம் பகுதியில் ஆண் யானை சுற்றி தெரிகிறது. அந்த யானை தண்ணீர் குடித்துவிட்டு கோவை- மஞ்சூர் சாலையில் உலா வந்தது. இதனையடுத்து யானை சாலையில் நின்றபடி துதிக்கையால் மர கிளைகளை உடைத்து இலைகளை தின்றது.
இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் சற்று தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு யானையை செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. அந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.