
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் ஒன்று ஓணம். இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். இந்த பண்டிகை கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் இன்று பண்டிகையை முன்னிட்டு இட்லி சாப்பிட போட்டி நடத்தப்பட்டுள்ளது. அதாவது பாலக்காடு அருகே கஞ்சிக்கோடு கொல்லப்புரா பகுதி உள்ளது.
இந்த பகுதியில் இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்ற நிலையில் முதல் பரிசை வெல்பவர்களுக்கு 5000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் சுரேஷ் என்ற முதியவர் கலந்து கொண்டார். அவர் வேகமாக இட்லி சாப்பிட்ட நிலையில் திடீரென தொண்டையில் இட்லி சிக்கியது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஓணம் திருநாளில் இப்படி ஒரு சோகம் அரங்கேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.