
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையில், நல்லெண்ண தூதராக பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் தோனியை குறித்து பேசிய அவர், தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று யாருக்கும் தெரியாது. ஏன் அவருக்கும் கூட தெரியாது. இன்னும் சில ஆண்டுகள் கூட அவர் விளையாடலாம்.
அந்த அளவுக்கு உடல் பிட்னஸ் உடன் இருக்கிறார். அவர் கடைசி நேரத்தில் இறங்கி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற அலட்சியம் கிடையாது. அவரது அறிவு கூர்மையும் விக்கெட் கீப்பிங் திறமையும் சிஎஸ்கே அணிக்கு பக்கபலமாக உள்ளது. சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பியது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.