
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது குஷி மற்றும் சிட்டாடல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் காதல் பற்றி பேசியுள்ளார். அதாவது தொகுப்பாளர் லவ் என்பதற்கு என்ன அர்த்தம் மாறி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு சமந்தா காதல் என்பது ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே தான் இருக்க வேண்டும் என்றில்லை.
அது நண்பர்களிடத்திலும் இருக்கலாம். கடந்த 8 மாதங்களாக என் நண்பர்கள் தான் என் அருகில் இருந்து என்னை பார்த்துக் கொண்டார்கள். நானும் அவர்களுக்கு அன்பை கொடுக்கிறேன். அதிக லவ்விங்காக இருக்கிறேன். ஒரு ரிலேஷன்ஷிப் தோல்வியில் முடிந்தால் அதற்காக நான் கசப்பான, நம்பிக்கை இல்லாத ஒருவராக மாறிவிடவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன் யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.