திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சீமான் பேசியுள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது, லட்டுவில் என்ன சனாதனம் இருக்கிறது. தவறு செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை முடிந்து விடும். அதன்பிறகு இனி இது போன்று தவறு நடக்காதவாறு சரியான ஒப்பந்ததாரரிடம் கொடுக்க வேண்டும். லட்டு உருட்டுவதை விட இவர்கள் உருட்டும் உருட்டு நாடு முழுவதும் பெரிய உருட்டாக இருக்கிறது. பால் மற்றும் நெய் போன்றவற்றை சாப்பிடுபவர்கள் மாட்டின் கொழுப்பை மட்டும் சாப்பிட மாட்டார்களா.?

நீங்கள் பெருமாளை மதிக்கிறீர்களா, இல்லை எனில் கேவலப்படுத்துகிறீர்களா.? ஒரு லட்டு வால் பெருமாள் மாசடைந்து விடுவாரா.? இல்லையெனில் புனிதம் தான் கெட்டுவிடுமா.? சாதி மதம் மற்றும் கடவுளை வைத்து அரசியல் செய்கிறவன் ஒருபோதும் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான் என்று கூறினார். மேலும் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் தான் திருப்பதி லட்டுவில் கொழுப்பு கலந்ததாக ஜகன்மோகன் ரெட்டி கூற கிறிஸ்தவரான ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தான் கொழுப்பு கலந்ததாக அவர்களும் குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூறினார்.