தமிழக பொதுப்பணி அமைச்சராக இருப்பவர் எ.வ வேலு. அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல் அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் எனக் கூறினார்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டால் நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் என்றார். திமுக தலைவர் என்ன சொல்கிறாரோ அதை 100 சதவீதம் ஏற்றுக் கொள்கின்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனவும் தெரிவித்தார். அதனால்தான் 75 ஆண்டுகள் கடந்து பவள விழா கொண்டாடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது கிட்டத்தட்ட அமைச்சர்கள் அனைவரும் உறுதிப்படுத்தி வருவதால் விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.