
உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் ஒரு பெண் கணவனை கொன்று காதலனுடன் டூயட் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண் தனது கணவனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது காதலரான சாஹில் ஷுக்லா என்பவருடன் சேர்ந்து தனது கணவன் சௌரப் ராஜ்புத்தை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சிமெண்ட் ட்ரம்மில் பதுக்கி உள்ளார்.
இந்த கொடூர கொலை வழக்கில் முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலர் ஷுக்லா முக்கிய குற்றவாளிகளாக இருக்கும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் ஹோலி கொண்டாட்டத்தில் இருவரும் சேர்ந்து மிகவும் நெருக்கமாக நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது இந்த வீடியோ மிகவும் வைரலான நிலையில் நெட்டிசன்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
मुस्कान और साहिल का एक और वीडियो आया सामने
3 मार्च को सौरभ राजपूत की हत्या करने के बाद 14 मार्च को कसोल में होली पार्टी करते दिखे.#saurabhrajput | #muskan | #sahil | #meerut | #viralvideo pic.twitter.com/rBvyiE6Vr9
— NDTV India (@ndtvindia) March 25, 2025
தன் கணவனை கொன்ற எந்த ஒரு குற்ற உணர்வும், மன வேதனையும் இல்லாமல் இதுபோன்று நடனம் ஆடுவது அவரது மனநிலையை வெளிப்படுத்துவதாக கருதப்படும் நிலையில் இந்த வீடியோ ஆதாரமாக விசாரணைக்கு சேர்க்கப்பட்டுள்ளது.மேலும் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என உத்தர பிரதேச போலீசார் உறுதி அளித்துள்ளனர்