
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் வடிவேலன் காரில் தனது மனைவி கார்த்திகா, 2 வயது மகள், தாய் துளசி ஆகியோருடன் வேப்பனஹள்ளி பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தடுத்தாரை பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கார் பாலத்தின் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துளசியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துளசி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.