
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் உபயதுல்லா கிராமத்தை சேர்ந்தவர் அசன்துல்லா. இவரது மனைவி சானியா. இந்த தம்பதியின் மகள் அஸ்வியா கடந்த 1-ஆம் தேதி தனது வீட்டின் வெளியில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இரண்டு நாட்கள் கழித்து, அஸ்வியாவின் உடல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் அஸ்வியா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு, அதன் பின்னர் அவரது சடலம் கால்வாயில் வீசப்பட்டது தெரியவந்தது. அஸ்வியாவின் தந்தை அசன்துல்லாவிடம், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடன் வாங்கியிருந்தார். அசன்துல்லா தொடர்ந்து தனது கடனை திரும்பக் கேட்டு வந்ததால், கோபமடைந்த அந்த பெண் தனது உறவினர்களுடன் சேர்ந்து, அஸ்வியாவை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இந்த கொடூரச் செயலுடன் தொடர்புடையதாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.