
சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டிகுட்டை மேடு பகுதியில் கணவனை இழந்த மீனா என்ற பெண் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் தாரமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பிற்காக மீனா மகனை தாரமங்கலத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மகளுடன் எட்டிக்குட்டை மேடு பகுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். நேற்று அதிகாலை மீனா தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என தெரியவரும். இதுகுறித்து வழக்குபதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்