
கர்நாடக மாநிலம் பெங்களூரு கொடிகேஹேள்ளி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 22 வயதுடைய இளம் பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவர் வேலை செய்யும் நிறுவனத்திலேயே திருமணமான வாலிபர் ஒருவரும் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இதனிடையே இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி தனக்கு திருமணமானதையே அந்த வாலிபர் மறைத்து இளம் பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.
அதோடு திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறிது நாள் கழித்து அப்பெண்ணை அந்த வாலிபர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு அவரிடம் பேசுவதையும் வாலிபர் நிறுத்திவிட்டார். இதனால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.