ராமநாதபுரம் அருகே வசித்து வரும் இளம் பெண் ஒருவர் புத்தாண்டை ஒட்டி தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மது போதையில் மிரட்டியுள்ளனர். மேலும் நீங்கள் இருவரும் தனிமையில் இருந்ததை நாங்கள் பார்த்து விட்டோம் என்று கூறியதோடு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியும் உள்ளனர். அது மட்டுமல்லாது அந்த பெண்ணின் காதலனை அடித்து விரட்டி விட்டு பெண்ணை 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை தாக்கிய நபர்கள் குறித்து அந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் 4 இளைஞர்களையும் கைது செய்ததோடு தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் புவனேஷ் குமார், சரண், செல்வகுமார், முனீஸ் கண்ணன் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்த நிலையில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகிர் தகவல்கள் வெளியானது.

அதில் இரவு நேரங்களில் அப்பகுதியில் சுற்றி திரியும் 4 பேரும் தனியாக அல்லது ஆண்களுடன் வரும் பெண்களை குறி வைத்து மிரட்டி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. அது மட்டுமல்லாது அவர்களிடம் உள்ள செல்போன், நகை, பணம் உள்ளிட்டவற்றையும் படித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக பாலியல் பலாத்கார விவகாரம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா விவகாரம் என தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ராமேஸ்வரத்தில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.