
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் தனது இரண்டு மகன்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் மேல குள்ளம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாத்திமா என்பது தெரியவந்துள்ளது. இவரது கணவர் பெங்களூரில் கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் தண்ணீர் குடிப்பது தொடர்பாக ஒரு குடும்பத்தினர் பாத்திமாவிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் தண்ணீர் பிடிக்க கூடாது எனக் கூறி அவர்கள் பாத்திமாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பாத்திமா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க முயன்றதாக பாத்திமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விசாரணையில், அவர் மேல குள்ளம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாத்திமா என்பது தெரியவந்துள்ளது. இவரது கணவர் பெங்களூரில் கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் தண்ணீர் குடிப்பது தொடர்பாக ஒரு குடும்பத்தினர் பாத்திமாவிடம் தகராறு சோதனை. மேலும் தண்ணீர் பிடிக்க கூடாது எனக் கூறி அவர்கள் பாத்திமாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாப்பரப்பட்டி காவல் நிலையத்தில் பாத்திமா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க முயன்றதாக பாத்திமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.