
உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு SOS எச்சரிக்கை அனுப்பும் வகையில் தனியார் பள்ளி மாணவிகள் காலணிகளை வடிவமைத்து அசத்தியுள்ளனர். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பலவிதமான பாதுகாப்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேச மாணவர்களின் புதுவித காலனி ஒன்று இடம் பிடித்துள்ளது. இதில் உத்தரபிரதேசத்திலுள்ள ஆர்.பி.ஐ.சி பள்ளியில் பயிலும் அமிர்ததிவாரி மற்றும் கோமல் என்ற மாணவர்கள் இந்த காலணியை உருவாக்கியுள்ளனர். இதில் பெண்களின் பாதுகாப்பிற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலணியின் கீழ் பட்டன் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஆபத்து என்றால் இந்த காலணியில் கீழ் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும் குடும்பத்தினர், நண்பர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என தேவையானவர்களுக்கு எச்சரிக்கை ஒலி சென்றுவிடும். இதன் மூலம் அவர்கள் இருக்கும் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இதில் உரையாடல்கள் கேட்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை வெறும் ₹2500 மட்டுமே இது குறித்து கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான அமிர்ததிவாரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் உருவாக்கிய செயலி, காலணியில் இருந்து செல்போனுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் காலணியில் கேமராவை பொறுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், சுற்றியுள்ள இருப்பிடம் மற்றும் காட்சிகளும் பகிரப்படும். பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்தே இந்த காலணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.