
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் டெனால்ட் டிரம்ப்பும் கமலாஹரிசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மிக்சிகனில் நடைபெற்ற பிரச்சாரத்தில் குடியரசு கட்சியின் அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடி அவர்களை சந்திப்பதாக கூறினார். மேலும் மோடி மிகவும் அற்புதமானவர் எனவும் தெரிவித்தார்.
மோடியும் டெனால்ட் டிரம்ப்பும் கடைசியாக 2020 ஆம் ஆண்டு சந்தித்துக்கொண்டனர். இந்நிலையில் வருகிற 21ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக செல்ல இருக்கிறார். அவர் செல்லும்போது அங்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் ஆகியோரை சந்திப்பார் என கூறப்படுகிறது.