
ஆமைகள் போன்று செயல்படக்கூடிய ரோபோக்களை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளது பலரை வியக்க செய்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆமைகள் நீரில் நீந்தவும் நிலத்தில் செல்லவும் திறன் கொண்ட ஆமை வடிவிலான ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆர்ட் என பெயரிடப்பட்ட இந்த ரோபோவின் கால்கள் அது செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு அதிக கால்களை வடிவமைத்து கொள்ளவும் கால்களுக்கான உறுதி மற்றும் அதன் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவையாகும்.
இதன் ஒவ்வொரு கால்களும் அதன் தோள்பட்டையில் அமைந்துள்ள இயந்திரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த ரோபோவானது வெற்றியடைந்தால் விரைவில் பல பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இது மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஏல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆர்ட் ரோபோ பலரை வியக்க செய்து வருகிறது.
