
இங்கிலாந்தின் லண்டனை தலைமை இடமாகக் கொண்ட “நைட் பிராங்க்” நிறுவனம் இந்த ஆண்டுக்கான உலகின் முன்னணி பணக்காரர்களுக்கான சொத்து விபரங்களை அறிக்கையாக வெளியிட்டது. இந்த அறிக்கையில் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் நபர்களின் சொத்து பட்டியல்கள் வெளியிடப்படும். இதில் இந்த ஆண்டு சுமார் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் வெறும் 7 கோடீஸ்வரர்கள் தான் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் வரலாறு காணாத விதமாக இந்த ஆண்டு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 26 புதிய கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 80,686 இதன் எண்ணிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டில் 85,698 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வரும் ஆண்டுகளில் 2028 ஆம் ஆண்டிற்குள் 93,750 பேர் இந்தியாவில் சுமார் 87 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு உடையவர்களாக இருப்பர் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.