நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கடந்த 15ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்பட்டது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள ஒரு இடத்தில் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர். அப்போது கொடிக்கம்பத்தின் உச்சியில் எதிர்பாராத விதமாக கொடி சிக்கிக் கொண்டது. இதனால் அங்கிருந்தவர்கள் செய்வதறியாத திகைத்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் திடீரென ஒரு பறவை ஒன்று வந்து அந்த கொடியை பிரித்து விட்டது. இதைப் பார்த்தவர்கள் இது தெய்வ செயல் என்று கூறினார்கள். அதோடு சிலர் இது இயற்கையின் அதிசயம் என்கிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.