பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சுனில் செட்டி. இவர் தமிழில் தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். இவருடைய மகள் அதியா செட்டியும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டருமான கே.எல் ராகுலும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில்  இவர்களுடைய திருமணம்  மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அருகே உள்ள நடிகர் சுனில் செட்டிக்கு சொந்தமான மிகப்பெரிய பண்ணை பங்களாவில் அண்மையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் மற்றும் நடிகை அதியாவுக்கு திருமணத்தின் போது முக்கிய பிரபலங்கள் கொடுத்த பரிசுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி பிரபல நடிகர் ஜாக்கி செராஃப் ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள Chopard வாட்ச் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். அதன் பிறகு பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் நடிகருமான அர்ஜுன் கபூர் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள வைர ப்ரைஸ்லைட் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். மகேந்திர சிங் தோனி ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள Kawasaki Ninja பைக்கை பரிசாக கொடுத்துள்ளார். பிரபல நடிகர் சல்மான்கான் 1.64 கோடி மதிப்புள்ள ஆடி கார் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். விராட் கோலி 2.17 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் நடிகரும் அதியாவின் தந்தையுமான சுனில் ஷெட்டி ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள பங்களா ஒன்றினை தன்னுடைய அன்பு மகளுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.