
சீன நிறுவனம் டேட்டிங் செல்லும் ஊழியர்களுக்கு ரொக்க பரிசு வழங்கிய சம்பவம் சோசியல் மீடியாவில் பேசு பொருளாகியுள்ளது. சீனாவில் குழந்தை பிறப்பு விகிதமும் திருமணம் செய்து கொள்வோரின் விகிதமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஸ்டா 360 டேட்டிங் செல்லும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதாக அறிவித்தது.
இந்த திட்டத்தில் பணியாளர்களுக்கு பல்வேறு வகைகளில் வெகுமதிகள் அறிவிக்கப்பட்டது. அங்கு பணிபுரியும் ஊழியர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தோடு அந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. சில பயனர்கள் அரசாங்கம் இதுபோன்ற சலுகைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். இன்னொரு விமர்சகர் அன்பை பணத்தால் அளந்து விட முடியாது என பதிவிட்டுள்ளார்.