பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றபோது அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பு விழாவில் இந்தியர்கள் மற்றும் ரஷ்யர்கர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது 6 வயது சிறுமி மற்றும் சில பெண்கள் இந்திய பாரம்பரிய பாவாடை தாவணி அணிந்து வந்தனர். அப்போது அந்த 6 வயது சிறுமி பெண்களுடன் சேர்ந்து பங்க்ரா நடனம் ஆடினார். இது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் வீடியோ வெளியான ஒரே நாளில் 1,60,000 பார்வையாளர்களை கடந்துள்ளது.