
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னதாக தெரிவித்திருக்கிறார். அதன்படி வந்தே சிட்டிங் ரயில், வந்தே மெட்ரோ, வந்தே ஸ்லீப்பர்கள் ஆகியவைதான் அந்த மூன்று வித ரயில்கள். வந்தே மெட்ரோ 100 கி.மீ வேகத்திலும், வந்தே சிட்டிங் ரயில் 100-500 கி.மீ, வந்தே ஸ்லீப்பர் ரயில் 550 கி.மீ வேகத்திலும் பயணிக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட 80 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே DRSS மற்றும் BHEL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 2024-25 ஆண்டுக்குள் 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க, மத்திய அரசின் 2021-22 பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.24,000 கோடி மதிப்பில் 2029ஆம் ஆண்டுக்குள் படுக்கை வசதிகள் கொண்ட 80 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.