திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்படம் நடந்துள்ளதாக வெளியான தகவல்கள், பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என மக்களின் கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து 16 இந்து சமூக அமைப்புகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் கலந்து கொண்டு, குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரினர். இதே நேரத்தில் கோவிலின் புனித தன்மையும், பக்தர்களின் நம்பிக்கையும் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.

இதன் மூலம், நாளை சனிக்கிழமை அனைத்து பெருமாள் கோவில்கள், ஆஞ்சநேயர் கோவில்கள், கருடாழ்வார் சன்னதிகளில் சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்ய திட்டமிடப்பட்டிருக்கின்றது. அடுத்த வாரம் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கடைசி சனி கிழமை சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று, ஏழுமலையானை