அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் வில்லியம் பிரையன் (70), பெவர்லி பிரையன் என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் வில்லியம் பிரையன் என்பவருக்கு இடது வயிற்றின் கீழ் வலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக வால்டன் கவுண்டியில் உள்ள அசென்ஷன் சேக்ரட் ஹாட் எமரால்டு கோஸ்ட் மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு மண்ணீரலில் பிரச்சனை இருப்பதாகவும், அதனை உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினரிடம் அறுவை சிகிச்சை செய்யுமாறு, அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தாமஸ் ஷக்னோவ்ஸ்கி மற்றும் டாக்டர் கிறிஸ்டோபர் பகானி ஆகியோரும் கூறினர்.

இதனால் அவரின் குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்காக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை நிபுணர் மண்ணீரலுக்கு பதிலாக கல்லீரலை தவறாக அகற்றினார். இதனால் அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது.

இந்த தவறான அறுவை சிகிச்சையால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி பெவர்லி பிரையன் மருத்துவமனை மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது காவல்துறையினர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வில்லியம் பிரையனின் வயிற்று வலிக்கு காரணம், அவரது மண்ணீரலில் ஒரு சிறிய நீர்கட்டி இருப்பதால் தான் என்பது தெரியவந்தது.