கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று ஆலயம் எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்களின் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 20 கோவில்களுக்கு தலா 5 லிட்டர் தீப எண்ணையை வானதி சீனிவாசன் வழங்கினார். அதன்பிறகு எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருக்கோவில்களின் மேம்பாட்டுக்காக ஆலயம் எனும் திட்டம் தொடங்கப்பட்டு தீப எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் உள்ள 20 கோவில்களுக்கு மாதந்தோறும் தீப எண்ணெய் வழங்குவது மற்றும் கோவில் பராமரிப்பு மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம். அதன் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு மக்கள் மன்றத்தின் முன்பாகவும் தமிழக அரசியலிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டதால் திமுகவினர் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது என்றார். அதன்பிறகு அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு வானதி சீனிவாசன் பில் தானே கேட்டீர்கள். பில் வந்ததா இல்லையா.? நீங்கள் பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா என்று பதில் அளித்தார்.