திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்கள்.  மொத்தமாக கூட்டணி கட்சிகள் அனைத்துமே 15 நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டைமுடிப்பதற்காக  திமுக பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நேற்றைய தினம் தொடங்கியிருக்கிறது. பிப்ரவரி 3 மற்றும் 4ஆம்  தேதி இடதுசாரி கட்சிகள், மதிமுகாவுடன்  பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள VCK கட்சி கேட்க இருக்கும் தொகுதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. P2019-ல் இரண்டு தொகுதிகளை விடுதலை சிறுத்தை கட்சிகள் பெற்றிருக்கிறது. தற்போது இந்த தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் மூன்று தொகுதிகளை விசிக கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுக பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் தெரிவிக்க இருக்கின்றார்கள்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவன்,  விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ரவிக்குமார் MPஆக இருக்கிறார்கள். சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என்ற இரண்டு தொகுதிகளோடு சேர்த்து  கூடுதலாக ஒரு பொது தொகுதியாக கள்ளக்குறிச்சி தொகுதி விசிகவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, கன்னியாகுமரி, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகளை வழங்க  வேண்டும் என பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு வழங்கி உள்ளார்கள்