சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், இந்திய பெண் ஒருவர் கார் ஒன்றில் அமர்ந்தபடி கனடாவைச் சேர்ந்த கருப்பினப் பெண் ஒருவரிடம் ஆபாச வார்த்தைகளைச் பேசும்  காட்சி தீவிர சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ‘N’ என தொடங்கும் மிக மோசமான இனம் சார்ந்த பாகுபாடு வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்துகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் இச்சம்பவத்தை கண்டித்து வருகின்றனர்.

 

“அவரே கருப்பா தான் இருக்கிறார், ஆனால் மற்றவரின் நிறத்தைக் கிண்டலடிக்கிறார்கள் என்பது மிக பெரிய இரட்டை முகம்,” என அவர்கள் கூறுகின்றனர். இது போன்ற செயல், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சிறப்பான சமூக மதிப்பை சீரழிக்கிறது என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இது போன்ற செயல்கள் இந்திய சமூகத்தைப் பற்றி வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தவறான நிலைப்பாடுகளுக்கு காரணமாகின்றன.

குறிப்பாக, சிலர் இந்த வீடியோவை வேடிக்கையாகக் கருதிவிட்டு, “இந்திய பெண்கள் யாரையும்  சண்டையில் வெல்ல விட மாட்டாங்க” என கருத்து பதிவிடுவது கவலை அளிக்கிறது. இது ஏன் ஒரு சமூக பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் நேரம் இது. இதுபோன்ற காட்சிகள், இந்தியர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டங்களை உலகளவில் உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.