
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இரவு நேரத்தில் பேருந்துக்காக 19 வயதுடைய இளம்பெண் காத்துக் கொண்டிருந்தார். அவர் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வாலிபர் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் இளம்பெண் அலறி சத்தம் போட்டார். உடனடியாக பொதுமக்கள் ஓடி சென்று வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர் போலீஸ்காரரின் காலில் விழுந்து மது போதையில் தவறு செய்து விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுங்கள் எனவும் கூறி அழுதார். இருப்பினும் போலீசார் வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.