
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் அரசு தொழிலாளர் உதவி ஆணையம் அமைந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி அலுவலகத்தின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் பீரோவில் இருந்த 6000 ரூபாய் பணம், கேமராக்கள், மோடம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தச்சக்குடி விளையைச் சேர்ந்த மெல்பரின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.