
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் சென்னையை சேர்ந்த ஆகாஷ் என்பவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது நண்பரான சந்தோஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சோனார்அள்ளி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.