திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த திலகன் ஆகியோர் திருமண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராஜாவுக்கும் குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரேசன், கதிரேசன், திலகன் ஆகிய மூன்று பேரும் ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பால் தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ராஜாவின் தாய் திருமால் கனியையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசன் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
நீங்க தான் ரியல் ஹீரோ…! மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய வாலிபர்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!
சென்னையை அடுத்த அரும்பாக்கத்தில் கனமழையால் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல், மாணவர் ரேயன் தவறி மின்சாரம் தாக்கிய நிலையில் தவித்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த கண்ணன் என்ற 23 வயது இளைஞர், யாரும் உதவ முன்வராத சூழ்நிலையில்…
Read moreதண்ணீர் கேட்டு வந்த வாலிபர்… உஷாரான தம்பதி…. அடுத்த நொடியே…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
சேலம் மாவட்டம் நாராயண நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் மாதவராஜ் (75) மற்றும் அவரது மனைவி பிரேமா (67) ஆகியோர், திருமணமான பிள்ளைகள் தனியாக வாழ்வதால் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை…
Read more