கரூர் மாவட்டத்திலுள்ள வேதாசலப்புரத்தில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகானா பானு(19) என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் சகானா பானுவின் பெற்றோர் புதுக்கோட்டையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். இதனையடுத்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது சகானா பானு வீட்டில் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சகானா பானுவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து காவல் சாகுல் அமீது நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சகானா பானுவை தேடி வருகின்றனர்.