
சென்னை மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செந்தமிழ் செல்வனுக்கு மைசூரைச் சேர்ந்த மதுமாலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் கோஷல் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் மதுமாலா தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து செந்தமிழ்ச்செல்வன் தனது நண்பர்களுடன் மைசூருக்கு சென்று தனது மகனை தூக்கி வந்தது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த மைசூரு நீதிமன்றம் கோஷலை மதுமாலாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை மதுமாலாவிடம் குழந்தையை ஒப்படைக்கவில்லை. பார்க்கவும் அனுமதிக்கவில்லை.
நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மதுமாலா தனது தாயுடன் கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கதவை திறக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் மதுமாலாவின் மாமியார் கவிதை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் போலீசார் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது மதுமாலாவின் மாமியார் வீட்டிற்குள் வந்தால் குழந்தையை கொன்று நானும் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதால் போலீசார் உள்ளே செல்லவில்லை.
இதற்கிடையே நேற்று மாலை மதுமாலாவின் மாமியார் தனக்கு நெஞ்சு வலிப்பதாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு சென்று மதுமாலாவின் மாமியாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து மதுமாலா போலீசாருடன் உள்ளே சென்று பார்த்த போது தனது குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் தொடர்ந்து மதுபாலா ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.